கொரோனா சிகிச்சைக்காக 58 தனியார் மருத்துவமனைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஆந்திர மாநில அரசு

0 1896

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆந்திராவில் 58 தனியார் மருத்துவமனைகளை மாநில அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 58 தனியார் மருத்துவமனைகளில் 19 ஆயிரத்து 114 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 1,286 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், தனிமைப்படுத்த தேவையான 717 படுக்கைகளும், 17,111 சாதாரண படுக்கைகளும் அடங்கும். அதுமட்டுமின்றி கூடுதலாக மேலும் 530 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்த அறிவுறுத்தினார். அதன் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments