கொரோனா தடுப்பு நடவடிக்கை காலத்தில் மக்கள் எதை செய்ய வேண்டும் ? எதை செய்ய கூடாது?
கொரோனா தடுப்பு நடவடிக்கை காலத்தில் மக்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்ற பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்ய வேண்டிய பட்டியலில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருப்போரை ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், மத்திய சுகாதார அமைச்சக இணையதளத் தகவல் அல்லது உலக சுகாதார அமைப்பு தகவலையே பகிர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பாக சமூகஇணையதளத்தில் வெளி வரும் தகவலை பிறருக்கு பகிர்வதற்கு முன்பு, நம்பகமான வட்டாரங்களில் அதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தொடர்பான ஆக்கப்பூர்வமான செய்திகளையே பகிர வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மக்கள் செய்யக் கூடாதவை என்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் தனிமைபடுத்தப்பட்ட நபர்களின் பெயர், அடையாளத்தை பரப்ப கூடாது என்றும், அச்சம், பீதியை ஏற்படுத்தும் செய்தி பகிர கூடாது, சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் அல்லது போலீஸுக்கு எதிராக செயல் பட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு இவர்கள்தான் காரணம் என்று குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது பகுதியையோ முத்திரை குத்த கூடாது என்றும், அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
செய்ய வேண்டியவை குறித்த பட்டியல்
1.அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருப்போரை ஊக்குவிப்பதுடன்..
2.அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்
3.மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சக இணையதளத் தகவல் (அ) உலக சுகாதார அமைப்பு தகவலையே பகிர வேண்டும்
4.சமூக இணையதளத்தில் வெளி வரும் தகவலை பகிர்வதற்கு முன்பு, நம்பகமான வட்டாரங்களில் உறுதிப்படுத்த வேண்டும்
5.கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தொடர்பான ஆக்கப்பூர்வமான செய்திகளை பகிர வேண்டும்
செய்யக் கூடாதவை குறித்த பட்டியல்
1.கொரோனா நபர்கள், தனிமைபடுத்தப்பட்டோரின் பெயர், அடையாளம்..
2.இருப்பிடத்தை சமூகவலைதளங்களில் பரப்ப கூடாது
3.அச்சம், பீதியை ஏற்படுத்தும் செய்தியை பகிரக் கூடாது
4,சுகாதாரம், துப்புறவு ஊழியர்கள் (அ) போலீஸுக்கு எதிராக செயல் படக் கூடாது
5.கொரோனா பாதிப்புக்கு குறிப்பிட்ட சமூகம் (அ) பகுதியை முத்திரை குத்த கூடாது
மேலும் தகவல்களுக்கு :https://www.mohfw.gov.in/pdf/AddressingSocialStigmaAssociatedwithCOVID19.pdf
Comments