ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, ஊரடங்கு உத்தரவை ஒடிசா நீட்டித்துள்ளது.நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு, ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என பிரதமர் மோடி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வரும் 11ஆம் தேதி பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில், ஒடிசாவில் ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கு ஜூன் 17 வரை அங்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளை ஒடிசாவில் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசை ஒடிசா முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Odisha to extend lockdown till April 30; schools to remain closed till June 17: CM Naveen Patnaik
— Press Trust of India (@PTI_News) April 9, 2020
Comments