கொரோனா செலவுக்காக புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்வு
கொரோனா தடுப்புச் செலவுக்காகப் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி நாளை முதல் ஒரு விழுக்காடு உயர்த்தப்பகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மத்திய அரசால் உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. அதற்கு மேல் மாநில அரசுகள் அவற்றின் மீது மதிப்புக் கூட்டு வரி விதித்து வருமானம் ஈட்டி வருகின்றன.
புதுச்சேரியில் பெட்ரோலுக்கு 21 புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடும், டீசலுக்கு 17 புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடும் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டு வந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் செலவுக்காக இந்த மதிப்புக் கூட்டு வரியை மேலும் ஒரு விழுக்காடு உயர்த்தப் புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரி உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்க பட்டுள்ளது.
Comments