சென்னையில் 7,000 நடமாடும் காய்கறி மற்றும் மளிகை கடைகள்
சென்னையில் பொதுமக்கள் வீட்டிற்கு அருகிலேயே காய்கறிகளை வாங்கிக் கொள்ளும் வகையில், 5000 தள்ளுவண்டி மற்றும் 2000 சிறிய ரக மோட்டார் வாகனங்களில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக முதற்கட்டமாக 400 நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதே போல் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்வதற்காக எத்தனை பேர் அனுமதி கேட்டாலும் உரிமம் வழங்கப்படும் என்றார்.
மேலும் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் போது பொதுமக்கள் தங்களுடைய உடலில் இருக்கும் பிரச்சனைகளை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் சென்னையில் மொத்தம் 19 லட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் இதுவரை 80 சதவிகிதம் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments