ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்து 100 தாலிபான்கள் விடுதலை
ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்த 100 தாலிபான் அமைப்பினரை அந்நாடு விடுதலை செய்துள்ளது.
தாலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து சிறைகளில் உள்ள தங்கள் அமைப்பினரை விடுவிக்கவேண்டும் என தாலிபான்கள் கேட்டு வந்தனர்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஆப்கன் அரசுக்கும், தாலிபான்களுக்கும் நடுவே நடந்த பேச்சுவார்த்தையில் இருந்து தாலிபான்கள் பாதியில் வெளியேறினர்.
இந்நிலையில் பல்வேறு சிறைகளில் இருந்த 100 தாலிபான் அமைப்பினரை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.
இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜாவித் பைசல் பேசும் போது, அமைதிக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக 100 தலிபான் கைதிகளை அவர்களின் உடல்நிலை, வயது மற்றும் மீதமுள்ள தண்டனையின் அடிப்படையில் விடுவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
Comments