மும்பையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மீறினால் கைது

0 1898

மும்பையில் பொதுஇடங்களுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொது இடங்களுக்கு வருவோர் மூன்று அடுக்கு முகக்கவசம், அல்லது துணியால் ஆன முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. பொதுநலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோரும், அலுவல் கூட்டத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும், அவர்கள் மீது, இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments