மாஸ்க் அணியாமல் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை- உத்திரப்பிரதேச அரசு எச்சரிக்கை
உத்திரப்பிரதேசத்தில், முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாஸ்க் அணியாமல் வெளியில் நடமாடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உத்திரப்பிரதேச அரசு எச்சரித்துள்ளது. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் தலைமைச் செயலாளர் அவானிஷ் அவாஸ்தி (Awanish Awasthi), கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளவாறும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா பரவலை மாவட்ட வாரியாக பட்டியலிட்டிருப்பதோடு, தொற்றுநோயின் தாக்கம், எந்தெந்த பகுதிகளில் தீவிரமாக உள்ளது என்பதை கணித்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், உத்திரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, ஆக்ராவில், கொரோனா பரவலின் தாக்கம் அதிகமுள்ளதாக உத்திரப்பிரதேச அரசு கூறியுள்ளது.
Comments