காஷ்மீரில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக கூடாரங்கள்
காஷ்மீரில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊரடங்கு உத்தரவையொட்டி இடம்பெயர முடியாமல் தவித்து வந்த நிலையில், அவர்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து தரப்பட்டுள்ளது.
ரஜோரி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்து குழந்தைகளுடன் தவித்து வந்த 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஊரடங்கு உத்தரவு காரணமாக வேறு இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அவர்களுக்கு அரசு சார்பில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, உணவுப்பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments