கொரோனாவுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ”போர்வீரர்கள்” -உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

0 1456

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைப் போர் வீரர்களாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு உடல் கவசம், முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கக் கோரிப் பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் அசோக் பூசண், ரவீந்திர பட் ஆகியோர் காணொலி மூலம் விசாரித்தனர்.

அப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக முன்னணியில் களப்பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் உண்மையான போர்வீரர்கள் எனத் தெரிவித்தனர். அவர்களுக்குத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments