கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது
தொலைக்காட்சி சேனல்கள், ஊடகங்கள் வரிசையில் அத்தியாவசிய சேவைகளுக்குள் வரும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும் ஊரடங்கிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அறியாமல் போலீசார் வெளியே செல்லும் கேபிள் டிவி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களும் அத்தியாவசிய சேவைகளுக்குள் வரும் நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கேபிள் டிவி பணியாளர்கள் வேலை தொடர்பாக அடையாள அட்டையுடன் வெளியே சென்றாலும் போலீசார், விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதம் விதிப்பதாகவும், வழக்கு பதிவு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள கேபிள் டிவி பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது மற்றும் அபராதம் விதிப்பது சட்டவிரோதம் என்பதையும் போலீசார் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Comments