கொரோனா சோதனைக்குத் தனியார் ஆய்வகங்கள் கட்டணம் பெறக் கூடாது
கொரோனா சோதனைக்குத் தனியார் ஆய்வகங்களும் மருத்துவமனைகளும் பொதுமக்களிடம் கட்டணம் பெறக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் காணொலி மூலம் விசாரித்தனர். அப்போது கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா தெரிவித்தார்.
மருத்துவமனைகளின் அருகில் உள்ள சொகுசு விடுதிகளில் மருத்துவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா சோதனைக்குத் தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் பெறுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கட்டணம் பெறக் கூடாது என அறிவுறுத்தக் கூறினர்.
தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களுக்குக் கட்டணத்தை அரசே செலுத்துவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments