கொரோனாவால் லாபம் அடைந்த ஒரே இந்திய தொழில் அதிபர்

0 33764

கொரோனா பரவலால் நாட்டின் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ள போதிலும் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் அதையும் மீறி இந்த ஆண்டு லாபம் சம்பாதித்துள்ளது.

ராதாகிஷண்  தமானியின் அவென்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் டி.மார்ட் கடைகள் தொடர்ந்து சக்கை போடு போடுகின்றன. இதனால்  நாட்டின் முதல் 12 பணக்காரர்களில், கொரோனாவால் பாதிக்கப்படாத ஒரே நபர் என்ற பெயரை தமானி தட்டிச் சென்றுள்ளார்.

தமானியின் ஏக வருமானத்திற்கு காரணமான டி-மார்ட்டுகள் இந்த ஆண்டு 18 சதவிகித வளர்ச்சியை சந்தித்து, அவரது சொத்து மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் பீதியின் பின்னணியில் பொருட்களை வாங்கிக் குவிப்பதும் இந்த வளர்ச்சிக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments