100 சவரன் நகையை திருடிவிட்டு கொள்ளை என நாடகமாடிய மனைவி - அதிர்ச்சியில் கணவர் தற்கொலை

0 2960

தூத்துக்குடியில் வீட்டில் இருந்த 100 சவரன் நகையை பதுக்கி வைத்து விட்டு கொள்ளை போனதாக நாடகமாடிய பெண்ணின் கணவன் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தாளமுத்துநகரைச் சேர்ந்த துறைமுக ஊழியரான வின்செட் என்பவரது வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், வின்செட்டுக்கு கசாயத்தில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து அவரது மனைவி ஜான்சியே நகை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்டு ஜாமினில் ஜான்சி வெளிவந்த நிலையில், வின்செட் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று அதிகாலை மனைவி ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது வின்செட் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments