மது கிடைக்காத விரக்தியில் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மது கிடைக்காத விரக்தியில் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனோரமாவின் மகன் பூபதி நீண்ட நாட்களாக மதுவுக்கு அடிமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது கிடைக்காமல் விரக்தியடைந்த அவர், அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments