தலைமறைவாக இருக்கும் தப்லீக் ஜமாத் ஆட்களைக் கண்டறிந்து கொலை முயற்சி வழக்குப் பதிவு

0 2077

உத்தரக்கண்ட் மாநிலத்தில் தலைமறைவாக இருக்கும் தப்லீக் ஜமாத் ஆட்களைக் கண்டறிந்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி நிசாமுதீன் தப்லீக் ஜமாத் கூட்டத்துக்குச் சென்று வந்தவர்கள் திங்கட்கிழமைக்குள் தாமாக முன்வந்து கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் உத்தரக்கண்ட் காவல்துறைத் தலைமை இயக்குநர் கெடு விதித்திருந்தார்.

காவல்துறையின் எச்சரிக்கையை அடுத்து 180 பேர் தாமாக முன்வந்து கொரோனா சோதனை செய்துகொண்டனர். அவர்கள் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலக்கெடு முடிந்தபின்னும் ரூர்க்கி, அரித்துவார் ஆகிய இடங்களில் தலைமறைவாக இருந்த இருவரைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments