ஊரடங்கு காரணமாக யமுனை ஆற்றில் பெருமளவு குறைந்த கழிவுநீர்
தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது பெருமளவு குறைந்துள்ளதால் யமுனை ஆற்றின் நீர் தூய்மையாகக் காணப்படுகிறது.
யமுனை ஆறு உத்தரக்கண்ட், டெல்லி, அரியானா உத்தரப்பிரதேச மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து பிரயாக் ராஜில் கங்கையாற்றுடன் கலக்கிறது. டெல்லியில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள், குடியிருப்புகளின் கழிவுகள் என ஒரு நாளில் 80 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும், 4 கோடி லிட்டர் தொழிற்சாலைக் கழிவுநீரும் ஆற்றில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதால் யமுனை ஆற்றில் கழிவு நீர் கலப்பது பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் யமுனை ஆற்றுநீர் தெளிவாகவும் தூய்மையாகவும் காணப்படுகிறது.
Comments