சங்கிலித் தொடர் போல பரவும் கொரோனாவை முறியடித்த ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம்

0 1689

சங்கிலித் தொடர் போல பரவும் கொரோனாவை முறியடித்துள்ளதாக ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மார்ச் 20ம் தேதி துபாயில் இருந்து ஜபல்பூருக்குத் திரும்பி வந்த நகை வியாபாரி ஒருவர் அவர் மனைவி மற்றும் பதின்பருவத்து மகள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து அரசின் நடவடிக்கைக்கு அங்குள்ள 20 லட்சம் மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நான்கு பேர் தொடர்பு கொண்ட ஒவ்வொரு நபரையும் தேடிப் பிடித்து போலீசார் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 600க்கும் மேற்பட்டவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். தனிப்படையை உருவாக்கி கடும் நடவடிக்கை எடுத்ததால் மொத்தம் எட்டு பேரில் நான்கு பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 12 நாட்களில் இதுவரை வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments