ஆசியாவின் புகழ்பெற்ற துலிப் மலர் தோட்டம் மூடப்பட்டது
ஆசியாவின் புகழ் பெற்ற மற்றும் மிகப் பெரிய துலிப் மலர் தோட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் 51வகைகளில் 12லட்சத்திற்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த துலிப் மலர் தோட்டத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments