கொரோனாவுக்கு 5ஜி நெட்வொர்க் காரணம் என வதந்தியால் செல்போன் கோபுரங்களுக்கு தீவைப்பு
கொரோனா தொற்று ஏற்படுவதற்கு 5ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்ற வதந்தியால் இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அங்கு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பச் சேவையை தொடங்கி உள்ளன. அதே சமயத்தில், 5ஜி நெட்வொர்க், கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிப்பதாக இங்கிலாந்தில் வதந்தி கிளம்பியது. இதன் காரணமாக லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை மக்கள் தீ வைத்து எரித்தனர்.
தொலைத்தொடர்பு நிறுவன என்ஜினீயர்களையும், ஊழியர்களையும் பொதுமக்கள் குறிவைத்து தாக்கி வருகின்றனர். இதனிடையே கொரோனாவுடன் 5ஜி நெட்வொர்க்கை தொடர்புபடுத்துவதற்கு விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments