போலி கடவுச் சீட்டு மூலம் பராகுவே நாட்டிற்குள் நுழைந்த ரொனால்டினோ கைது

0 3972

போலியான ஆவணங்கள் மூலம் பராகுவே நாட்டுக்குள் நுழைந்த பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோவை வீட்டுக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பிரேசிலிய கால்பந்து வீரரான ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் போலியான கடவுச்சீட்டு மூலம் பராகுவே நாட்டுக்குள் வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் இருவரும் 61 புள்ளி 6 மில்லியன் டாலர் மதிப்பில் ஜாமீன் கட்டிய பின் ஜாமீனில் வெளியே வந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவர்கள் இருவரும் தற்போது தங்கியிருக்கும் ஹோட்டலையே வீட்டுக் காவலாக மாற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments