90வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய முதியவர்
அமெரிக்காவின் லூசியானா பகுதியில் முதியவர் ஒருவர் தனது 90வது பிறந்தநாளை கொரோனா வைரஸ் காரணமாக வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.
அவருக்கு வாழ்த்து சொல்ல வந்த உறவினர்களும், நண்பர்களும் தாத்தாவின் அருகில் வராமல் தனி மனித விலகலை கடைபிடித்து காரில் அமர்ந்த படியே அவரை சுற்றி வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ஒவ்வொரு காரிலும் முதியவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தன. தாத்தாவும் ஒரு நாற்காலியில் அமர்ந்த படி உறவினர்களின் இந்த வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
Comments