ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஈக்வடார் முன்னாள் அதிபருக்கு 8ஆண்டு சிறைதண்டனை
ஈக்வடார் நாட்டின் முன்னாள் அதிபர் ரபேல் கொரியாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஊழல் வழக்கில் 8ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2007 முதல் 2017ஆம் ஆண்டு வரை ஈக்வடார் நாட்டு அதிபராக ரபேல் பணியாற்றியுள்ளார். கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு ஈகுவடாரை விட்டு வெளியேறிய அவர் தற்போது பெல்ஜியத்தில் வசித்து வருகிறார்.
2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி அளிக்கும் வகையில் பொது ஒப்பந்தங்களில் 7 புள்ளி 5 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் வாங்கியதாக ரபேல் மற்றும் துணை அதிபர் உள்பட 19பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஈக்வடார் நாட்டு அரசியலில் ஈடுபட அவருக்கு 25ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ரபேல் அறிவித்துள்ளார்.
Comments