பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் காவலர் உயிரிழப்பு

0 1107

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பேஹரா பகுதியில் சிஆர்பிஎப் மையம் செயல்பட்டு வருகிறது.

அப்பகுதியில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் அந்த மையத்தில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் தலைமைக் காவலர் ஷிவ்லால் நீதா என்பவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். இதனிடையே சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments