கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய வூகான் நகரில் இயல்பு நிலை

0 1824

சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய வூகான் நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் அடைபட்டு கிடந்த மக்கள் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா உயிரிழப்பு நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல அப்பகுதி கொரோனாவில் இருந்து விடுபடுகிறது.

இதன் பலனாக வூகானில் இருந்து ஹூபேய் மாகாணத்திற்குள்ளாக ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் ரயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது.

இதில் 276 பயணிகள் பயணித்தனர். இதே போன்று நெடுஞ்சாலைகளும் திறக்கப்பட்டு மக்கள் கார்களில் அணி அணியாக செல்கின்றனர். விமான சேவைகளும் அப்பகுதியில் தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments