கொரோனாவால், இத்தாலியில் 16,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ரஷ்யா உதவிக்கரம்

0 3287

உலகிலேயே கொரோனா தொற்றுக்கு அதிக மக்களை இழந்திருக்கும் இத்தாலிக்கு, உதவிக்கரம் நீட்டும் விதமாக, மருத்துவ குழு மற்றும் மருத்துவ உபகரணங்களை, ரஷ்ய அரசு அனுப்பியுள்ளது.

இத்தாலி நாட்டில் பெர்கமோ (Bergamo) நகரில் உள்ள மருத்துவமனையில், இரு நாட்டு மருத்துவர்களின் கலந்துரையாடல்  காணொலியை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நட்புணர்வை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு, ரஷ்ய அரசு "From Russia with love" என பெயரிட்டுள்ளது.

இது 1963 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் பெயராகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments