கொரோனா தனிமை வார்டுகளாக ரயில் பெட்டிகளை மாற்ற எதிர்ப்பு
கொரோனா தனிமை வார்டுகளாக ரயில்பெட்டிகளை மாற்றுவதை எதிர்த்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐயாயிரம் ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்ற முடிவெடுத்து, 2500 பெட்டிகளைக் குறுகிய காலத்தில் தனிமை வார்டுகளாக மாற்றியதாக ரயில்வே துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முத்துசாமி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், போதிய உட்கட்டமைப்பும் சுகாதாரமும் இல்லாத இடங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனுவைக் காணொலி மூலம் விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் இது குறித்து மத்திய மாநில அரசுகள் வரும் வியாழனன்று பதிலளிக்க உத்தரவிட்டார்.
Comments