இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

0 1212

மும்பை பங்குச்சந்தையில் வணிகநேர முடிவில் சென்செக்ஸ் இரண்டாயிரத்து நானூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாகக் கடந்த ஒன்றரை மாதங்களாக உலக அளவிலும் இந்தியாவிலும் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில் செவ்வாயன்று இந்தியப் பங்குச்சந்தைகளில் தொடக்கம் முதலே வணிகம் ஏற்றத்துடன் காணப்பட்டது.

வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இரண்டாயிரத்து 476 புள்ளிகள் உயர்ந்து 30 ஆயிரத்து 67 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 708 புள்ளிகள் உயர்ந்து எட்டாயிரத்து 792 ஆக இருந்தது. வங்கிகள், மருந்து தயாரிப்பு, தூய்மைப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை 13 விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரை அதிகரித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments