சென்னையில் வீடு வீடாக சென்று ஆய்வு: கொரோனா தொற்று பரவல் அதிகம் கொண்ட 43 இடங்கள் மூடப்பட்டது
சென்னையில் மட்டும் கொரோனா அதிகமாக பரவும் இடங்களாக 43 இடங்கள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளது என்றும், அந்த பகுதிகளில் 9 லட்சம் மக்கள் இருப்பதாகவும் மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என கணக்கெடுக்கும் பணி 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியில் கணக்கெடுக்கும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை முழுவதும் 16 ஆயிரம் பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் பீனிக்ஸ் மாலில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அதனுடன் தொடர்புடைய 3,200 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments