மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.7 விழுக்காடாக அதிகரிப்பு
நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 43 மாதங்களில் இல்லாத வகையில் எட்டு புள்ளி ஏழு விழுக்காடாக உயர்ந்துள்ளது.
ஜனவரி மாதம் 42 புள்ளி ஒன்பது ஆறு விழுக்காடாக இருந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம், மார்ச் மாதத்தில் 41 புள்ளி ஒன்பது விழுக்காடாகக் குறைந்துள்ளது.
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 42 விழுக்காட்டுக்கும் கீழே சென்றது இதுவே முதன்முறையாகும். வேலையளிப்பு விகிதமும் 38.2 விழுக்காடு என இதற்குமுன் இல்லாத வகையில் குறைந்துள்ளது.
இதேபோல ஜனவரியில் 7 புள்ளி ஒன்று ஆறு விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை மார்ச் மாதத்தில் 8 புள்ளி ஏழு விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மார்ச் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பிருந்தே பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளதால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
Comments