அசாமில் தனிமைப்படுத்தும் முகாம்கள் குறித்து மத ரீதியில் விமர்சனம்- எம்.எல்.ஏ மீது தேசதுரோக வழக்கு
அசாம் மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்கள் குறித்து மத ரீதியில் விமர்சித்த எம்.எல்.ஏவுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு அரங்கங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றி ஆளும் பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ அமினூல் இஸ்லாம் விமர்சித்த ஆடியோ ஒன்று வெளியாகியது. அதில் தனிமைபடுத்தும் முகாம்கள், தடுப்பு காவல் மையங்களை விட மோசமாக இருப்பதாகவும், அங்கு டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களை மருத்துவப் பணியாளர்கள் துன்புறுத்துவதாகவும் பேசியிருந்தார்.
இந்த ஆடியோ வைரலானதை அடுத்து அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Comments