தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் - சிவராஜ் சிங் சவுகான்

0 3491

கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனப் பலரும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும், சூழ்நிலையைப் பொறுத்து இதுபற்றி முடிவெடுக்கப்படும் என்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மக்களின் உயிர் முதன்மையானது என்றும், பொருளாதாரத்தைப் பிறகுகூடத் தூக்கி நிறுத்தலாம், இழந்த உயிரைத் திரும்பத் தர முடியாது எனவும் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments