கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் தாராளமாக வழங்க வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயினை திடமாக எதிர்கொண்டு சமாளிக்கவும், வருங்காலங்களிலும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் வேண்டியுள்ளதால், தொழில் அதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரின் பங்களிப்பையும் தமிழ்நாடு அரசு நாடுவதாகவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
"சிறு துளி பெரு வெள்ளம்" என்ற முதுமொழிக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும், சிறு தொகையை வழங்கினால் பேருதவியாக இருக்கும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க : https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html
Comments