பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆக்சிஜன் உதவியுடன் மட்டுமே ஐ.சி.யூ.வில் சிகிச்சை: இங்கிலாந்து அரசு தகவல்

0 1799

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), ஆக்சிஜன் உதவியுடன் மட்டுமே, ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வருவதாக, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவி உதவியுடன், அதிதீவிர சிகிச்சை பிரிவில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள இங்கிலாந்து அரசு, வெறும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலமாக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில், மத்திய லண்டனில் உள்ள செயிண்ட் தாமஸ் (Saint Thomas) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments