திருமண விழா மூலம் பரவிய கொரோனா !
சென்னையில் மக்கள் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய அவரால் பிறருக்கும் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில், மணமக்கள் உட்பட திருமணத்தில் பங்கேற்ற 28 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்.
மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருமணத்தில் பங்கேற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கோடம்பாக்கத்தில் அவர்கள் வசித்த பகுதி மூடி சீல்வைக்கப்பட்டு, ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Comments