டெல்லி முதலமைச்சருக்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்

0 4875

டெல்லியில் பணியாற்றும் கேரளச் செவிலியர்களுக்குக் கொரோனா தொற்றாமல் இருக்கத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொடுக்குமாறு அரவிந்த் கேஜ்ரிவாலுக்குப் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலருக்குக் கொரோனா தொற்று உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்துக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரளச் செவிலியரின் குறைகளைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments