கொரோனாவைக் கட்டுப்படுத்த 5T திட்டம்- டெல்லி முதலமைச்சர் பேட்டி
டெல்லியில் ஒரு லட்சம் பேருக்குக் கொரோனா சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் நாட்டிலேயே மகாராஷ்டிரம், தமிழகத்துக்கு அடுத்தபடியாக மூன்றாமிடத்தில் டெல்லி உள்ளது. இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 5T என்கிற திட்டத்தைத் தீட்டியுள்ளதாகக் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சோதனை, கண்டறிதல், சிகிச்சை, குழுச் செயல்பாடு, தடமறிதல் ஆகிய ஐந்துகட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக நோய்த்தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் ஒரு லட்சம் பேருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார்.
தென்கொரியாவில் பெருமளவில் மேற்கொண்ட சோதனைகளால் அனைத்து நோயாளிகளையும் கண்டறிந்து சிகிச்சை அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments