உலக சுகாதார தினமான இன்று, மருத்துவ உலகிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக அமையட்டும் - பிரதமர் மோடி
உலக சுகாதார தினமான இன்று, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ-சுகாதார பணியாளர்கள் என அனைவருக்கும் நமது நன்றியை தெரிவிக்கும் நாளாக அமையட்டும் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நமது பரஸ்பர நலனுக்காக நாம் பிரார்த்திக்கும் அதே நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான போரை தீரத்துடன் வழிநடத்தும் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவிப்போம் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
நம்மையும், மற்றவர்களையும் காக்க சமூக விலகியிருத்தலை தவறாமல் கடைப்பிடிப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ள மோடி,நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் ஒவ்வொருவரும் உடல்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Today on #WorldHealthDay, let us not only pray for each other’s good health and well-being but also reaffirm our gratitude towards all those doctors, nurses, medical staff and healthcare workers who are bravely leading the battle against the COVID-19 menace. ??
— Narendra Modi (@narendramodi) April 7, 2020
Comments