கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி
2 மாதங்களுக்கு முன்பு வரை, ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை ஆன பூக்களின் விலை, ஊரடங்கு காரணமாக வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து, வாங்க ஆள் இல்லா மல்லி, பூ வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆன ஒரு கிலோ மல்லியின் விலை, 60 ரூபாயாக சரிந்து விட்டது. ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆன முல்லை 50 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனை ஆன பெங்களூரு ரோஸ் 20 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
200 ரூபாய் என விற்பனை ஆன சாமந்தி பூ, 40 ரூபாய் எனவும், 150 ரூபாய்க்கு விற்பனை ஆன சம்மங்கி 30 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, 1000 ரூபாய்க்கு விற்பனை ஆன கனகாம்பரம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டபோதிலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம் பேடு வணிக வளாகம் வாங்க ஆள் இல்லாமல், வெறிச்சோடி காணப்படுகிறது.
Comments