கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை பிடித்தம் செய்து பயன்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகளுக்கு, அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால், தொகுதி நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், எம்எல்ஏக்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். இதை அறியாமல், டுவிட்டரில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறியிருப்பதாகவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments