கொரோனா விழிப்புணர்வு பற்றிய சென்னை போலீஸ் வீடியோ

0 1878

மக்களின் மனதை தொடும் வகையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

உன்னைக் காக்கும் நேரமிது.. உன் உயிரைக் காக்கும் நேரமிது என்ற பாடலோடு துவங்குகிறது இந்த வீடியோ...

கொரோனா காலத்தில் காவல்துறையினர் நடத்தும் மனிதாபிமான செயல்களை படம் பிடித்து காட்டும் இந்த வீடியோவில் ஒலிக்கும் வெளியே போகாதே. உயிரைப் போக்காதே என்ற வரிகள் மனதை உருக்குவதாக இருக்கிறது.

இந்த விழிப்புணர்வு பாடலை ஒருமுறை கேட்டால் போதும், மக்களின் பகல் நேர பாய்ச்சல் வெகுவாக குறையும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

மக்கள் மனங்கவர்ந்த பல படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதிய இந்த பாடலை ரகுநந்தனின் இசையில் பாடகர் செந்தில்தாஸ் மனமுருக பாடி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments