அசாமில் தலைமறைவாக இருக்கும் தப்லீக் ஜமாத் நபர்கள்: கொரோனா பரிசோதனை செய்ய அசாம் அரசு எச்சரிக்கை
நிசாமுதீன் தப்லீக் கூட்டத்திற்கு சென்று விட்டு மறைவாக தங்கியிருக்கும் நபர்கள் உடனடியாக வெளியே வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர்கள் மீது மரணம் விளைவிக்கும் குற்றம் சுமத்தப்படும் என அசாம் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவர்கள் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளுமாறு இறுதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தப்லீக் ஜமாத்துடன் 80 பேருக்கு மட்டுமே தொடர்பு இருக்கலாம் என கருதப்பட்டநிலையில் இப்போது அந்த எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளதாக அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 30 பேர் தலைமறைவாக இருப்பதாவும்,அவர்களை கண்டுபிடிக்க முஸ்லீம் சமுதாய உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாவும் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா தெரிவித்துள்ளார்.
Comments