வேளாண் விளைபொருள் விற்பனை கட்டண விலக்கு, கடனுதவி

0 2471

பொதுமக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் தடையின்றிக் கிடைப்பதற்கு ஏதுவாகக் கட்டண விலக்கு, கடனுதவி உள்ளிட்ட சலுகைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.  

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உழவர்களின் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பதில் சிரமம் இருந்தால் அந்தந்த மாவட்ட வேளாண் துணை இயக்குநரைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் சரக்குப் போக்குவரத்துக்கான அனுமதி பெற்றுத் தர உதவி புரிவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். காய்கறிகள், பழங்களைக் குளிர்பதனக் கிடங்குகளில் சேமித்து வைக்க ஏப்ரல் 30ஆம் தேதி வரை கட்டணம் பெறப்படாது எனவும், அதை அரசே ஏற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காய்கறிகள், பழங்களை உழவர்களிடம் கொள்முதல் செய்யத் தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குப் பத்து லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புற நுகர்வோருக்காகத் தோட்டக்கலைத் துறையின் 500 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விளைபொருட்களை உழவர்களிடம் கொள்முதல் செய்யும் வணிகர்கள் ஒரு விழுக்காடு சந்தைக் கட்டணத்தை ஏப்ரல் 30ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments