ஊரடங்கை நீட்டுவதும், அதை தளர்த்துவதும் மக்களின் கைகளில் உள்ளது - முதலமைச்சர் எடியூரப்பா
இப்போது உள்ள நிலைமையை வைத்து பார்க்கும் போது ஏப்ரல் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிந்து விடும் என கூற முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே ஊரடங்கை தளர்த்துவது பற்றி முடிவெடுக்க முடியும் என திட்டவட்டமாக கூறினார்.
ஊரடங்கை நீட்டுவதும், அதை தளர்த்துவதும் மக்களின் கைகளில் உள்ளது என்ற அவர், இதில் இறுதி முடிவு எடுப்பது பிரதமர் மோடி மட்டுமே எனவும் கூறியுள்ளார். அதே போன்று ஏப்ரல் மாத த்தில் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என்ற அவர் மே மாதத்தில் ஊதியத்தை குறைப்பது பற்றி அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Comments