அவசர சிகிச்சை பிரிவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளைச் செய்து வந்தார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்சனுக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை விடுத்திருந்த அறிக்கையில், அடுத்தடுத்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் அவரின் உடல்நலம் மேம்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், போரிஸ் ஜான்சன் திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரணம் தெரிவிக்கப்படாவிட்டாலும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Comments