ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் இன்று முதல் இலவசமாக வினியோகம்..
தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதியாக 1000 ரூபாய் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
மேலும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் விலையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று முதல் ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் பொருட்கள் இந்த மாதம் விலை இல்லாமல் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அரசின் உத்தரவை பின்பற்றி தனிநபர் இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments