ஊரடங்கால் வாகன விற்பனையாளர்களின் இன்னல் மேலும் அதிகரிப்பு
ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் தானியங்கி வாகன விற்பனையாளர்களின் இன்னல்கள் மேலும் அதிகரித்துள்ளன.
வாகன விற்பனையாளர்கள் தங்களின் கையிருப்பில் உள்ள பிஎஸ் 4 வாகனங்களை விற்பதற்கு உச்சநீதிமன்றத்தில் கால நீட்டிப்பு கோரியிருந்தனர்.
இதையடுத்து ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் கையிருப்பில் உள்ள பிஎஸ் 4 வாகனங்களில் 10 விழுக்காடு அளவு விற்பனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் அடுத்த 10 நாட்களில் வாகனங்களை வாங்கப் பொதுமக்கள் முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதிகத் தள்ளுபடி கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தாலும் அது விற்பனையாளரின் லாபத்தைப் பாதிக்கும். இந்நிலையில் விற்காத வாகனங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளது விற்பனையாளர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.
Comments