ஊரடங்கை தளர்த்தும் முடிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்

0 9097

நாடு தழுவிய ஊரடங்கை விலக்கிக் கொள்வது பற்றிய முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், நாடு மற்றும் மக்களின் நலன் அடிப்படையில் ஊரடங்கை விலக்கும் முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்காணிக்க அதிகாரமிக்க குழுக்களை அரசு ஏற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், உலக நிலவரமும் நிமிடத்திற்கு நிமிடம் அரசால் கவனிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எனவே ஊரடங்கை ரத்து செய்வது பற்றிய முடிவு சரியான முறையில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments