இந்தியாவில் முதல்முறையாக காரில் இருந்தபடியே கொரோனா பரிசோதனை அறிமுகம்
இந்தியாவில் முதல்முறையாக, காரில் இருந்தபடியே, கொரோனா பரிசோதனை செய்யும் முறை, டெல்லி, டாக்டர் டாங்க்ஸ் மருத்துவமனையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வருவோரின் ரத்த மாதிரி, அவர்கள் காரில் அமர்ந்தபடியே, எடுக்கப்பட்டு, பின் 24 முதல் 36 மணி நேரத்திற்குள், பரிசோதனை முடிவுகள், அவர்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பரிசோதனையை மேற்கொள்ள 4,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, இரு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு, மருத்துவமனை தரப்பில் அனுமதி மறுக்கப்படுகிறது.
Comments