கொரோனா அச்சுறுத்தலால் யானை முகாம்கள் கடும் பாதிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் யானைகளுக்கு போதிய உணவளிக்க முடியாத நிலைக்கு யானை முகாம்கள் தள்ளப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளை யானை சவாரி அழைத்து செல்வதன் மூலம் வருமானம் ஈட்டிவந்த முகாம்கள், கொரோனா தாக்கத்தால் மூடப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் வரத்து முற்றிலும் நின்று போனதால், ஊழியர்களுக்கு ஊதியமும் யானைகளுக்கு தேவையான உணவுகளும் அளிக்கமுடியவில்லை என்று காஞ்சனபுரி மாகாணத்தில் செயல்படும் யானைகள் முகாம் ஒன்றின் உரிமையாளர் டும்ரோங் (Dumrong) வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Comments